இரு ஐந்து மாதங்கள் என்னை கருவில் சுமந்தவளே,
உன் உடல் இளைத்து என் உடல் வளர்த்தவளே,
பிரசவ வேதனையில் துடி துடித்து பூவாய் என்னை பெற்றெடுத்தவளே,
உன் ரத்தத்தை பாலாக்கி பால் அமுது ஊட்டியவளே,
நீ பசித்து இருந்து என் பசி தீர்த்தவளே,
நீ விழித்திருந்து என்னை உறங்க வைத்தவளே,
தடுக்கி நான் விழுந்தபோது வழிந்த இரத்தம் கண்டு இதயம் தடித்துப்போனவளே,
பூப்போல் என்னை அணைத்து பொத்தி பொத்தி வளர்த்தவளே,
நித்தம் என் வளர்ச்சி கண்டு பொங்கி பெருமிதம் கொண்டவளே,
பரந்து விரிந்த உலகில் என்னை பரிதவிக்கவிட்டுச் சென்றவளே,
மண்ணுலகில் என்னை மாளாத்துயரத்தில் மூழ்கடித்துவிட்டு
நீ மட்டும் விண்ணுலகில் மாயமாய் மறைந்தது என்ன நியாயம்??
அன்பு பொங்கும் உன் அழகு முகத்தை
இனி நான் என்று காண்பேன்??
அம்மா! என்று நான் யாரை அழைப்பேன்?
வழிந்தோடும் என் கண்ணீரை துடைத்து
என்னையும் உன்னுடன் அழைத்து செல்ல
அம்மா நீ என்று வருவாய்???
Shaan Fathima